#UttarPradeshல் 7 வயதில் கடத்தப்பட்ட நபர் | 14 ஆண்டுகளுக்கு பின் கடத்தல் வழக்கில் அவரே வழக்கறிஞராக வாதாடிய அதிசயம்!
உத்தரப் பிரதேசத்தில் 7 வயதில் கடத்தப்பட்ட ஹர்ஸ் ராஜ் 14 ஆண்டுகளுக்கு பின் தனது கடத்தல் வழக்கை வழக்கறிஞராக வாதாடியது பலரால் பாராட்டப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் நகரில் ஹர்ஸ் ராஜ் என்ற 7 வயது சிறுவன் தந்தை மற்றும் உறவினர் முன்னிலையிலேயே துப்பாக்கி முனையில் கொள்ளையர்களால் காரில் கடத்திச் செல்லப்படுகிறான். ஆக்ராவில் இருந்து சம்பல் பகுதிக்கு சிறுவனை கடத்திச் சென்ற கொள்ளயர்கள் அவனது பெற்றோர்களிடம் ரூ.55 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
போலீஸ் தேடி வந்ததால் சிறுவனை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு இடம் மாற்றியுள்ளனர். சுமார் ஒரு மாத காலத்துக்குள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என அந்த சிறுவனை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துக்கொண்டு கொள்ளையர்கள் சுற்றியுள்ளனர். கடைசியாக மே 2007 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் கண்டறிந்து சிறுவனை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் :ChessOlympiad | தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி!
இந்த கடத்தலில் தொடர்புடைய 14 பேரை அதற்கடுத்த ஒரு ஆண்டிற்குள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட அந்த சிறுவன் தற்போது 24 வயது இளைஞன். மேலும், பட்டம் பெற்ற வழக்கறிஞர். தனது கடத்தல் வழக்கில் இறுதி விசாரணையில் நீதிமன்றத்தில் தன் சார்பாக ஆஜரான ஹர்ஸ் ராஜ் இறுதி வாதத்தை முன்வைத்துள்ளார். நீதிபதியின் அனுமதி பெற்று சரியாக 55 நிமிடங்களில் தனது இறுதி வாதத்தை ஹர்ஸ்ராஜ் சொல்லி முடித்துள்ளார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். 14 பேரில் இருவர் வழக்கு நடக்கும்போதே காலக்கட்டத்திலேயே உயிரிழந்துள்ளனர்.