For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

10:03 PM Nov 04, 2024 IST | Web Editor
கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல்  பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
Advertisement

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று (நவ. 3) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில் தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஹிந்து கோயில் முன்பு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது கொடிக்கம்பங்களைக் கொண்டு அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த இடம் வன்முறைக் களமாக மாறியது. இதில், அங்கிருந்த ஹிந்து மக்களை விரட்டியடிக்கப்பட்டது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதமர் கண்டனம் இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “கனடாவில் உள்ள ஹிந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்டத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது அயலக மக்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் அதிர்ச்சிகரமானது. இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

Tags :
Advertisement