For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளா | எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார் - பிரபலங்கள் அஞ்சலி!

01:15 PM Dec 26, 2024 IST | Web Editor
கேரளா   எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் காலமானார்   பிரபலங்கள் அஞ்சலி
Advertisement

கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் (91) காலமானார். திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் கடந்த, 15ம் தேதி காலை முதல் மூச்சுத் திணறல் காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (டிச. 25) இரவு அவர் காலமானார்.

புன்னயூர்குளத்தைச் சேர்ந்த டி.நாராயணன் நாயருக்கும், கூடல்லூரைச் சேர்ந்த அம்மாளு அம்மாவுக்கும் இளைய மகனாகப் பிறந்தார். இவர், நாவலாசிரியர், ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர். எளிய மொழியின் மூலமாகவும், பழக்கமான வாழ்க்கைச் சூழலின் மூலமாகவும், எழுத்துகள் மூலம் வாழ்க்கையின் யதார்த்தங்களை வாசுதேவன் நாயர் எழுத்துகளின் மூலம் உணர்த்தினார்.

இவர், இருள் ஆத்மா, ஓலமும் திறமும், ஷெர்லாக், வானபிரஸ்தம் போன்ற கதைகள் மலையாளிகளின் இதயங்களை வென்றன. ஊரு வடக்கன் வீரகதா, பெருந்தச்சன், பரிணயம், வைஷாலி, சதயம் என 30 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மாஞ்சியில் விமலாவும், நாலுகெட்டில் அப்புண்ணியும், அசுரவித்தில் கோவிந்தன் குட்டியும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள். எம்டி தனது சொந்த படைப்பான முரமென்னிக்கு திரைக்கதை எழுதி திரைப்பட உலகில் நுழைந்தார்.

நிர்மால்யம், பந்தனம், மண், வாரிக்குழி, கடவுள், ஒரு செருப்புஞ்சிரி ஆகிய படங்களை இயக்கியவர். 'நிர்மால்யம்' 1973ல் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. பின்னர் மத்திய அரசு 2005-இல் அவருக்கு பத்ம பூஷண் விருது அளித்தது.

Tags :
Advertisement