For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2 நாட்களாக அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கிய முதியவர்!

01:41 PM Jul 15, 2024 IST | Web Editor
2 நாட்களாக அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கிய முதியவர்
Advertisement

கேரளாவில் அரசு மருத்துவக் கல்லூரி லிப்ட்டில் முதியவர் ஒருவர் 2 நாட்களாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரவீந்திரன் நாயர் (59) கடந்த சனிக்கிழமையன்று மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது முதல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். ஆனால் முதல் தளம் வந்தும் லிப்ட் திறக்கவில்லை.

தான் மாட்டிக்கொண்டதையடுத்து உதவிக்காக கூச்சலிட்டுள்ளார். ஆனால் யாருக்கும் கேட்கவில்லை. அவரது தொலைபேசியும் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சென்ற ரவீந்திரன் இரண்டு நாட்களாக வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் நேற்று இரவு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவீந்திரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல லிப்ட் ஆப்ரேட்டர் வேலைக்காக லிப்டை இயக்கியுள்ளார். அப்போது லிப்ட்டில் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்ததை பார்த்த அவர், போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அது ரவீந்திரன் என்பதை உறுதி செய்துள்ளனர்.

யாரும் உதவிக்கு வராத நிலையில், செல்போனும் சுவிட்ச் ஆப் ஆனாதால் இரண்டு நாட்கள் லிப்ட்டிலேயே சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது. 2 நாட்களாக ஒருவர் லிப்ட்டில் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement