For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்: சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

01:23 PM Oct 31, 2023 IST | Web Editor
கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்  சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
Advertisement

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக ஊடகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது.

குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். விசாரணையில், களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் IED(Improvised Explosive Device) ரக குண்டு பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் தான்தான் குற்றம் செய்ததாக  ஒப்பு கொண்டு கொடகரை காவல் நிலையத்தில் ஆஜராகினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாராணையில் அவர்தான் குற்றத்தை செய்ததாக போலீசார் உறுதி செய்தனர். யோகாவா சாட்சி அமைப்புடன் தனக்கு அதிருப்தி இருந்ததாலும், அவர்களது கடுமையான கோட்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தனக்கு பிடிக்காததாலும் குண்டு வைத்ததாக டோமினிக் வீடியோ வெளியிட்டு தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சமாதான அரசியலின் விலையை, சமூகத்தின் அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. வரலாறு அதைதான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவாக, வெறுப்பை பரப்பவும், கேரளத்தில் ஜிகாத் அமைக்கவும் அழைக்கின்றன. பொறுப்பற்ற முட்டாள்தனமான அரசியல்.” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும் விமர்சித்திருந்தார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கேரள காங்கிரஸ் கமிட்டி அளித்த புகாரின் அடிப்படையில், ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags :
Advertisement