For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு – இணையத்தில் வைரல்!

03:37 PM Jul 31, 2024 IST | Web Editor
கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு – இணையத்தில் வைரல்
Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertisement

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

ரகு தாத்தா’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக திரைப்படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனத்தை பெற்றது.

இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்த திரைப்படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். படத்தின் இரண்டாவது பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த  திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement