பேபி ஜான் Promotion நிகழ்ச்சியில் 'தோசை' என கிண்டல் - நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி!
மும்பையில் நடைபெற்ற புரமோசன் நிகழ்ச்சியில் தோசை என கிண்டல் செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சில நாட்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனியை கரம் பிடித்தார். இவர் திருமணம் முடித்த கையோடு பேபி ஜான் படத்தின் புரமோஷன் வேலைகளில் இறங்கினார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் ஒரு புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்தார்.அப்போது புகைபடம் எடுப்பதற்காக கிரித்தி கிரித்தி என புகைப்படக் கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அதற்கு நான் கிரித்தி கிடையாது கீர்த்தி என பதிலளித்தார். உடனே புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட சில ஊடகத்தை சார்ந்தவர்கள் தோசா.. தோசா.. என அவரை கிண்டலடித்தனர்.
தென் இந்தியர்களை தோசா, சாம்பார், இட்லி என கிண்டலடிப்பதை வட இந்தியர்கள் வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தோசா என அவர்கள் சொன்னதும் , எங்க ஊருல அது பிரபலம். அதனால் எனக்கு பிடிக்கும். உங்களுக்கு பிடிக்காதா என பதிலடி கொடுத்தார். அப்போது பேபி ஜான் படத்தில் நடித்த ஹீரோ வருண் தவன், நமது விருந்தாளிகளை கிண்டலடிப்பது சரியல்ல என்றார். வருண் தவானின் பதிலைத் தொடர்ந்து அவர்கள் அமைதியானர்கள். கீர்த்தி சுரேஷின் பதிலடி சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.