For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி - தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு!

08:04 AM Mar 16, 2024 IST | Jeni
கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி   தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு
Advertisement

பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின,

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, கடந்த ஆண்டு அவரை கைது செய்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த கெஜ்ரிவாலுக்கும் பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சௌத் குரூப் நிறுவனத்திற்கு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம் ஆத்மி கட்சி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. சௌத் குரூப்பில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர்.

இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அமலாக்கத்துறையும் கவிதாவிடம் பல முறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் நேற்றும் இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பின்னர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

கவிதா கைது செய்யப்பட்டதற்கு பிஆர்எஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நடவடிக்கை பாஜக, காங்கிரஸின் சதி என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கவிதா கைது செய்யப்பட்டிருப்பது பிஆர்எஸ் கட்சியின் மன உறுதியை குலைக்கும் முயற்சி என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.  தொடர்ந்து இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கும் பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Tags :
Advertisement