ஹிட் லிஸ்டில் இணையும் கவின் - அனிருத் காம்போ... ரசிகர்களை கவர்ந்த 'கிஸ்' படத்தின் 'திருடி' பாடல்!
கவினின் ‘கிஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியானது.
08:20 AM May 01, 2025 IST | Web Editor
Advertisement
அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ‘கிஸ்’ படத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ‘திருடி’ வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisement
இப்பாடலை இசையமைப்பாளர் அனிரூத் பாடியுள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஆஷிக் ஏ.ஆர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியானது. காதல் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.