“காதோர தோடே... என்னப்படுத்தும் பாடே” - லவ் மேரேஜ் முதல் பாடல் வெளியீடு!
தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. அதனைத் தொடர்ந்து வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், டாணாக்காரன் போன்ற படங்களின் மூலம் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகி வருகின்ற படம் “லவ் மேரேஜ்”. இதில் விகரம் பிரபு உடன் சுஸ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. 2025 கோடையில் வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான கல்யாண கலவரமே பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை ஷான் ரோல்டனே எழுதி இயக்கியுள்ளார்.