கரூர் சம்பவம் : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கில் காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சந்திரா என்ற பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ’உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. ஆனால் இந்த இந்த சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக் கொண்டு வரும் வண்ணம் சிறப்பு விசாரணை குழுவுக்கு தடை விதிப்பதோடு கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.