For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் தர்மேந்திரா மறைவு ; பிரதமர் மோடி இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
05:11 PM Nov 24, 2025 IST | Web Editor
பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் தர்மேந்திரா மறைவு   பிரதமர் மோடி இரங்கல்
Advertisement

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 89 வயதாகும் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலம் தேறியதால் வீடு திரும்பினார். ஆனாலும் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இச்செய்தியை பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்துள்ளார். இதனை தொடர்ந்து சினிமா, அரசியல் என பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி நடிகர் தர்மேந்திராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  ”நடிகர் தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் திரைப்பட ஆளுமையின் ஒரு அடையாளம். அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வசீகரத்தையும் ஆழத்தையும் கொண்டு வந்த ஒரு அற்புதமான நடிகர். அவர் மாறுபட்ட வேடங்களில் நடித்த விதம் எண்ணற்ற மக்களின் இதயத்தைத் தொட்டது. தர்மேந்திரா தனது எளிமை, பணிவு மற்றும் அரவணைப்புக்காகவும் அதே அளவு போற்றப்பட்டார். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement