திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கார்த்திகை தீப திருவிழா!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகள் மற்றும் கோயில் முழுவதிலும் தீப விளக்கேற்றி கொண்டாடினர்.
சிவன் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் நடைபெற்ற மறுநாள், பெருமாள் கோயில்களில் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (டிச. 15) இரவு கார்த்திகை தீப உற்சவம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு கோயில்களில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் ஆகியோர் தீபங்களைக் கையில் ஏந்தி நான்கு மாட வீதி வழியாகப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது நான்கு மாட வீதிகளில் மற்றும் கோயில் முழுவதிலும் தீபம் ஏற்றப்பட்டது.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறை எதிரில் உள்ள வடகிழக்கு கோயில்களில் அர்ச்சகர்கள் கார்த்திகை தீபம் ஏற்றினார்கள்.