கர்நாடகா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் - திரவுபதி முர்மு உத்தரவு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் அவ்வப்போது நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேரைப் பணியிட மாற்றம் செய்வதாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, 7 நீதிபதிகளையும் தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாற்றம் செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் உட்பட 7 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.