For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா - ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள்..!

10:27 AM May 19, 2024 IST | Web Editor
திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா   ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள்
Advertisement

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதியுலா சென்றது.  இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத
தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.   இக்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற
சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.   இந்த நிலையில்,  இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.  முன்னதாக செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையை நடைபெற்றது.இதனையடுத்து செண்பக தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினார்.  இதேபோல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேர்களில் எழுந்தருளினர்.  பின்னர் தேர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்,  திருநள்ளாறு எம்.எல். ஏ. சிவா உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.  ‘ அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் ஆர்வத்துடன் 5 தேர்களையும் ஒவ்வொன்றாக இழுத்து சென்றனர்.

தொடர்ந்து நாளை இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,  இரவு சனீஸ்வர பகவான் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும் நாளை மறுநாள் இரவு தெப்போற்சவம் நடைபெற உள்ளது.

Tags :
Advertisement