Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜகவில் இணையப்போவதாக பரப்பப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்நாத்!

06:11 PM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் பாஜகவில் இணையப் போகிறார் என்ற வதந்திக்கு தற்போது அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியில் இருந்தும் பலர் விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் தனது மகன் நகுல்நாத் எம்.பி.யுடன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, ‘பாஜகவுக்கு கமல்நாத் தேவையில்லை, அவருக்கான பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன’ என மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறினார். இந்நிலையில், கமல்நாத் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர்,

“ராகுல் காந்தியின் பாரத் ஜோதோ நியாய யாத்திரையை வரவேற்பதில் மத்தியப் பிரதேச மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகமாக உள்ளனர். எங்கள் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் தெருக்களில் இறங்கி அநீதி, அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தீர்க்கமான போராட்டத்தை அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மக்கள் மற்றும் காங்கிரஸின் துணிச்சலான தொண்டர்கள் இதில் கலந்துகொண்டு அவரின் பலமாகவும், தைரியமாகவும் மாறுங்கள். நீங்களும் நானும் சேர்ந்து அநீதிக்கு எதிரான இந்த மாபெரும் பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் அவர் பாஜகவில் இணைகிறார் என்ற வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tags :
Bharat Jodo Nyay YatraBJPCongressKamalnathRahul gandhi
Advertisement
Next Article