'கல்கி 2898 ஏடி' படத்தின் டப்பிங் பணியில் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள படங்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இத்திரைப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்த படம் முதலில் ஜனவரி 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இப்போது ஜூன் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் டிரெய்லர் ஜூன் 10-ம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப் பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தில் கமல் சுமார் 19 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவார் என்றும், இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கான காட்சிகள் அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
Ulaganayagan #KamalHaasan at @VoiCcEeStore Recording studio Chennai for #Kalki2898AD dubbing🔥 pic.twitter.com/UXBNaH4LQm
— SundaR KamaL (@Kamaladdict7) June 7, 2024