Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கமல்ஹாசன் பிறந்தநாள் - செல்வப்பெருந்தகை வாழ்த்து!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12:44 PM Nov 07, 2025 IST | Web Editor
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழர் சிந்தனைக்கு புதிய பரிமாணம் கொடுத்த கலைப்பேராளியான நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அரசியல் துறையிலும், கலைத்துறையிலும், ஒவ்வொரு தலைமுறைக்கும் திசை காட்டும் உங்கள் பயணம் தொடர்ந்து மேலும் உயரங்களை எட்டட்டும்! தமிழ் மண் உங்கள் கனவுகளை வெற்றி செய்யட்டும்"! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
BirthdayCongressKamal haasanselvaperunthagai
Advertisement
Next Article