கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் - அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தொடர்ந்து அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
காலை அமர்வில் நீர்வளம் இயற்கை வளம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாடு துறை குறித்த விவாதம் நடைபெறுகிறது. பிற்பகல் அமர்வில் மாற்றுத்திறனாளிகள் சமூக நலம், வீட்டு வசதி, மதுவிலக்கு ஆயத்தீர்வை, ஆகிய துறைகளில் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மதுவிலக்கு துறை விவாதம் முக்கியத்துவம் பெறும் எனத் தெரிகிறது. அதேநேரத்தில் காலையிலேயே கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய சாவுகள் எதிரொலியாக அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவை வருகை தந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்எம்வீரப்பன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.