For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் | மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு!

11:47 AM Jun 20, 2024 IST | Web Editor
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்   மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்   அண்ணாமலை அறிவிப்பு
Advertisement

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்  தொடர்பாக நாளை மறுநாள் மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க அறிவித்துள்ளது. 

Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 34 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  நாளை மறுநாள் பா.ஜ.க. சார்பில் மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று,  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.

அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.  திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நேற்றைய தினம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம்.  ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறி போனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல்,  பல உயிர்கள் பலியாகும் வண்ணம்,  தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து,  வரும் ஜூன் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

Tags :
Advertisement