For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வார் 2 திரைப்படம் - புது அப்டேட் கொடுத்த படக்குழு!

06:07 PM Apr 10, 2024 IST | Web Editor
வார் 2 திரைப்படம்    புது அப்டேட் கொடுத்த படக்குழு
Advertisement

‘வார் 2’ படப்பிடிப்பிற்காக  நடிகர் ஜுனியர் என்டிஆர் நாளை மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வார். இதன் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படக்குழு என்டிஆரின் கதாபாத்திரத்தை ரகசியமாகவே வைத்துள்ளது. ஆனால் படத்தின் நாயகன் ஹ்ரித்திக் ரோஷனுக்கு இணையாக அவரின் கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வார்2 படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக நாளை ஜுனியர் என்டிஆர் மும்பை செல்ல உள்ளதாகவும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement