For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

11:27 AM Jun 01, 2024 IST | Web Editor
 ஜூன் 4   இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

"ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்"  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

18வது மக்களவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைய உள்ளது.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  முதற்கட்ட தேர்தல் (102 தொகுதிகள்) கடந்த மாதம் 19-ம் தேதியும்,  2ம் கட்ட தேர்தல் (88 தொகுதிகள்) கடந்த மாதம் 26-ம் தேதியும்,  கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93 தொகுதிகள்),  கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96 தொகுதிகள்),  கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49 தொகுதிகள்), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58 தொகுதிகள்) நடைபெற்றது.

2024 மக்களவைத் தேர்லுக்கான 7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (57 தொகுதிகள்) நடைபெறுகிறது.  தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில்,  INDIA கூட்டணி வெற்றியின் முகட்டில் நிற்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

"பாஜக வின் பத்தண்டுகால ஆட்சியை வீழ்த்தி,  இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட INDIA கூட்டணி,  மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து,  வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற எண்ணத்தில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது.

இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக,  தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.  தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் INDIA கூட்டணியின் முன்னணித் தலைவர்கள்,  பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : ஒரு வயது குழந்தைக்கு மறுவாழ்வளித்த 10 மாதக் குழந்தை!

INDIA கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.  வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் INDIA கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்.  இது தொடர்பாக INDIA கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் பொருளாளரும்,  நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.  பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!"

இவ்வாறு தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement