தொடர்ந்து 2-வது நாளாக சரிந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 2வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15 விலை குறைந்து 6810 ஆகவும், சவரனுக்கு ரூ 54480க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது. இதன் எதிரொலியாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் ரூ.6550க்கும், சவரனுக்கு ரூ.2,080 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : மகளிர் ஆசிய கோப்பை : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!
இந்நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.6,490-க்கும், சவரனுக்கு 720 குறைந்து ரூ.51,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல், வெள்ளி விலையும் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.