Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவேற்காட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - உரிமையாளரே நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்!

07:10 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

திருவேற்காட்டில் வீட்டில் இருந்த 103 சவரன் திருடு போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக உரிமையாளரே தனது உறவினர் மூலம் நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

Advertisement

சென்னையை அடுத்த திருவேற்காடு அயனம்பாக்கம் ஈஜிபி நகரை சேர்ந்தவர்
ஜனார்த்தனன்(44).  இவர் வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் எஞ்ஜினியராக
பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி கோகிலா (40). இவர்களுக்கு பவதாரணி என்ற
மகள் உள்ளார்.  ஜனார்த்தனன் கடந்த மாதம்தான் வெளிநாட்டில் இருந்து சென்னை
திரும்பியுள்ளார்.

இந்த சூழலில் கடந்த 28ம் தேதி ஜனார்த்தனன் தனது குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.  பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவை உடைத்து, அதில் இருந்த 103 சவரன் நகையை திருடிச் சென்றதாக திருவேற்காடு போலீசாருக்கு ஜனார்த்தனன் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேராவை ஆராய்ந்து வந்தனர்.  இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக  உரிமையாளரே நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.  போலீசார் நடத்திய விசாரணையில், உரிமையாளரான ஜனார்த்தனன் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்ததும், அதனால் வீட்டிலிருந்த நகைகளை கொஞ்ச கொஞ்சமாக விற்று அதனை சரி செய்து வந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, அவர் தனது உறவினரான வடபழனியை சேர்ந்த தியாகராஜன் (38) என்பவரின் உதவியுடன் அதில் மீதம் இருந்த நகைகளை மறைத்து வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.  இதனை அடுத்து, நகை திருடு போனது தொடர்பாக கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiCrimefraudinvestigationPoliceTheftThiruverkadu
Advertisement
Next Article