அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பெசோஸ்!
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் அந்நிறுவனத்தின் பங்குகளை விற்பதாக தெரிவித்துள்ளார்.
1994-ம் ஆண்டு ஆன்லைனில் புத்தக விற்பனைக்காக தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம் தற்போது உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் சியாட்டலை தலைமையிடமாக கொண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் கேரேஜில் ஆரம்பித்த நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் செயல்படும் விற்பனை நிறுவனமாக உள்ளது.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ். இவர் 2021-ல் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். இவர் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏறத்தாழ 1.2 கோடி அமேசான் பங்குகளை விற்றதாக தெரிவித்துள்ளார்.
பிப்.7,8 ஆகிய தேதிகளில் 1 கோடியே 19 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.840 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமேசானின் 5 கோடி பங்குகளை விற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.