For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

10:27 AM May 23, 2024 IST | Web Editor
ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்
Advertisement

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங்.  இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும்,  தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில்,  அவரை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகனும் காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் ஜெயக்குமாரை தேடி வந்த போலீசார்,  அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டனர்.  பாதி எரிந்த நிலையில் அவர் மீட்கப்பட்டதை அடுத்து கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் கொலையா தற்கொலையா எனப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு பல்வேறு தகவல்கள் செய்திகளாகவும் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  டி.என்.ஏ டெஸ்ட், உடற்கூறாய்வு முடிவுகள் என அறிவியல் பூர்வமான விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்திருந்த நெல்லையின் தென்மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்திருந்தார். மேலும், இவரது மரணம் தொடர்பாக பகீர் தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் பலரிடமும் விசாரணையை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக விசாரணை பணிகள் தொடங்கி சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

Tags :
Advertisement