"பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!
பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது :
"பாஜக உடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுக வின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவின் முடிவில் 2026 மட்டுமல்ல, எப்போதும் மாற்றமில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இதையும் படியுங்கள் : சர்ச்சைப் பேச்சு விவகாரம் | முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு!
எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்றே எடப்பாடி பழனிசாமி கூறினார். பாஜகவுடன் திமுகதான் மறைமுக கூட்டணியில் உள்ளது. பாஜகவுடன் மறைமுக ஒப்பந்தத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது.
திருச்சி சிவா நடத்திய பார்ட்டி நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அமைச்சராக இருந்தபோதே பிரதமரை உதயநிதி எப்படி சந்திக்க முடிந்தது. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சரை அழைத்தனர்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.