#JanaNayagan படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கிடையே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது. இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியகியுள்ளது. அதன்படி, ஜன நாயகன் படத்தின் முதல் பாடலை வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இது அரேபிக் குத்து பாடலை போன்று பெப்பி ட்ராக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.