Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#JammuKashmirElection2024: பாஜக வேட்பாளர்கள் தேர்வில் கடும் அதிருப்தி!

03:46 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறாத தலைவர்களின் ஆதரவாளர்கள் மாநில தலைமையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

Advertisement

ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27-ம் தேதி மற்றும் ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து 2ம் கட்ட தேர்தல் செப். 25-ம் தேதி மற்றும் 3ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக். 1-ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக். 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.

இதனிடையே, இன்று (ஆக. 26) காலை 10 மணிக்கு 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால், சுமார் 12 மணியளவில் பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை திரும்பப் பெற்றது. தொடர்ந்து, திருத்தப்பட்ட 15 வேட்பாளர்கள் பெயர் கொண்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்களின் ஆதரவாளர்கள் மாநில தலைமையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து, அந்த மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த எஸ்.சி பிரிவு தலைவர் ஜெகதீஷ் பகத், “கடந்த 18 ஆண்டுகளாக பாஜகவுக்காக நாள் முழுவதும் உழைத்து வருகிறேன். ஆனால் இன்று எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்பி மோகன்லால் 2 நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்ததால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பட்டியலையும் திரும்பப் பெறாவிட்டால், பாஜக விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என தெரிவித்தார்.

Tags :
Assembly Elections 2024BJPcandidates listECIelection 2024ELECTION COMMISSION OF INDIAJagdish BhagatJammu and KashmirNews7Tamilnews7TamilUpdatesSSP Mohan Lal
Advertisement
Next Article