#JammuKashmirElection2024: 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது பாஜக!
ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சில நிமிடங்களில் திரும்பப் பெற்ற பாஜக தற்போது திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27-ம் தேதி மற்றும் ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
தொடர்ந்து 2ம் கட்ட தேர்தல் செப்.25-ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29-ம் தேதி தொடங்குகிறது. செப்.5-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மற்றும் செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். அதேபோல், 3ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக். 1-ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5-ம் தேதி தொடங்கி செப்.12-ம் தேதியுடன் முடிவடைகிறது. செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. இன்று (ஆக. 26) காலை 10 மணிக்கு 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால், சுமார் 12 மணியளவில் அந்த வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை திரும்பப் பெற்றது. பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுத்துள்ளதால் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
भारतीय जनता पार्टी द्वारा आज दिनांक 26.08.2024 सोमवार को जम्मू व कश्मीर विधानसभा चुनाव 2024 हेतु प्रथम चरण के प्रत्याशियों की पहली सूची जारी की गई। pic.twitter.com/MogmHMdVle
— BJP Jammu & Kashmir (@BJP4JnK) August 26, 2024
இந்நிலையில் தற்போது 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜ்போராவில் ஸ்ரீஅர்ஷித் பாத், ஷோபியானில் ஸ்ரீஜாவித் அகமது காத்ரி, அனந்த்நாக் தொகுதியில் சயத் வாசாஹாத், தோடாவில்வில் ஸ்ரீ கஜாய் சிங் ராணா உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளது.