For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் - முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட #Congress கட்சி!

10:02 PM Sep 16, 2024 IST | Web Editor
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்    முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட  congress கட்சி
Advertisement

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை தெரிவித்துள்ளது.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்.18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்.8ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. அதேநேரத்தில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் இன்று (செப்.16) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியதாவது, "சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படும். காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாள்களுக்குள் சிறுபான்மையினருக்கான ஆணையம் உருவாக்கப்படும். ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.72 நிர்ணயிக்கப்படும். அனைத்து வகையான பயிர்களுக்கும் 100 சதவிகித காப்பீடு வழங்கப்படும்."

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

Advertisement