For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘அவதார் 3’-ன் தலைப்பை வெளியிட்ட ஜேம்ஸ் கேமரூன்!

02:56 PM Aug 10, 2024 IST | Web Editor
‘அவதார் 3’ ன் தலைப்பை வெளியிட்ட ஜேம்ஸ் கேமரூன்
Advertisement

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகும் அவதார் 3 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. அவதார் 2 ரூ.17,000 கோடி வசூலை குவித்ததாக கூறப்படுகிறது. அவதார் 2' படத்தின் வெற்றியால் 'அவதார் 3' படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவதார் 3க்கு FIRE AND ASH என பெயரிடப்படுள்ளது. இத்திரைப்படம் டிச.10, 2025ல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement