For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு!

12:34 PM May 19, 2024 IST | Web Editor
திருமயம் அருகே சாரல் மழையில் ஜல்லிக்கட்டு
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisement

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு ஜனவரி
மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  குறிப்பாக தமிழ்நாட்டிலேயே அதிக வாடிவாசலை கொண்ட மாவட்டமாகவும், அதே போல் அதிகப்படியான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கிறது.  அதன்படி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் நடைபெற்றது.

அந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது முதல் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு என மூன்று வகையான போட்டிகள் தினசரி நடைபெற்றது.  இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியத்தில் உள்ள ஸ்ரீ அழகிய நாச்சியம்மன்
கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த நாட்டார்கள் சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு
போட்டியை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உறுதிமொழி வாசித்து
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பின்னர் காளை மற்றும் வீரர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்த பிறகு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 500 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளது.  நான்கு சுற்றுக்களாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, தங்களது வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  மேலும் இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,  வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சாரல் மழையில் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.  அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தொடர்ந்து, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத் துறை என பல்வேறு துறைகளின் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement