இவன் தந்திரன்2 படத்தின் ஹீரோ இவரா....... !
வினய் நடித்த ‘ஜெயம் கொண்டான்’, பரத் நடித்த ‘கண்டேன் காதலை’, கவுதம்கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’, மிர்ச்சி சிவா நடித்த ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட பல கமர்சியல் படங்களை இயக்கியவர் ஆர். கண்ணன். இவர் இயக்கி, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள காந்தாரி படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இவன் தந்திரன்2 படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ஆர்.கண்ணன். இவர் இயக்கத்தில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘இவன் தந்திரன்’. இதில் சக்தி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பராக ஆர்.ஜே பாலாஜியும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்திருந்தனர்.
பிரபல பொறியியல் கல்லூரியில் ஒரு மோசமான அமைச்சரின் துணையோடு நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இப்படம் உருவாகி இருந்தது. மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு, சிறந்த விமர்சனங்களையும் பெற்று அதன் தொடர்ச்சியாக உருவாகும் ‘இவன் தந்திரன் 2’ வும், அதே விறுவிறுப்பான திரைக்கதையும் கதை களத்தில் அமைகிறதாம், இதனை மசாலா பிக்ஸ் தயாரிக்கிறது.
சரி, இவன் தந்திரன் 2வில் யார் ஹீரோ என விசாரித்தால், இதில் கவுதம்கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி இல்லை. ஆனால், அவருக்கு பதில் ‘சிங்கம் 3;, ‘வடசென்னை’, ‘கேஜிஎப்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சரண் நாயகனாக நடிக்கிறார். கல்லூரி மாணவரான சஷாங்க் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
‘இந்தியன் 3’, ‘இரு துருவம்’, விரைவில் வெளியாக இருக்கும் நிலையில்ள ‘காளியன்’ படத்தில்றார்கள் நடித்துள்ள நடிகை சிந்து பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது ஜெயம் ரவியின் கராத்தே பாபு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தெலுங்கில் உள்ள அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ‘நம்ம ஊரு இசையமைப்பாளர்’ எஸ்.எஸ்..தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னையில் ‘இவன் தந்திரன் 2’ படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. படத்தொடக்கவிழாவில் நடிகை சுகாசினி மணிரத்னம் பங்கேற்று படக்குழுவை வாழ்த்தினார். அவர் பேசுகையில் ‘மணிரத்னம் டீமில் பணியாற்றியவர் ஆர்.கண்ணன். அவர் உழைப்பும், அவர் கற்பனையும் அபாரம். மிக குறுகிய காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்’’ என்றார்.
இதனைதொடர்ந்து இயக்குனர் கண்ணன் பேசுகையில், ‘‘தி கிரேட் இந்தியன் படத்தை சில வாரங்களில் முடித்தேன். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் விரைவில் முடிகிறது. தமன் இசையமைப்பதும், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்வதும் பலம். முதற்பாகம் மாதிரியே இதுவும் திரைக்கதையில் மாறுபட்ட, விறுவிறு படமாக இருக்கும்’ என்றார்.