For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இது சினிமா பொங்கல் - ரசிகர்களுக்கு விருந்தளிக்க இன்று வெளியாகிறது 4 படங்கள்.!

07:02 AM Jan 12, 2024 IST | Web Editor
இது சினிமா பொங்கல்   ரசிகர்களுக்கு விருந்தளிக்க இன்று வெளியாகிறது 4 படங்கள்
Advertisement

பொங்கலை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ் மற்றும் மிஷன் சேப்டர் 1 ஆகிய படங்கள் இன்று திரையரங்குளில் வெளியாகின்றன.

Advertisement

பொங்கலையும் தமிழ் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி,  பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.  அப்படங்கள் குடும்பங்களுடன் கொண்டாடப்படுவதும் வழக்கம்.  அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாக உள்ளன.  இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை இங்கு காண்போம்.

கேப்டன் மில்லர்

தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.  இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அயலான்

‘இன்று நேற்று நாளை’ புகழ் இயக்குநர் ரவிக்குமாரின் 2வது திரைப்படம் அயலான்.  நடிகர் சிவகார்த்திகேயன்,  ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும்,  4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

மிஷன் சேப்டர்-1

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’.  இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி  ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

மெரி கிறிஸ்துமஸ்

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ்.  இப்படத்தில் ராதிகா சரத்குமார்,  காயத்ரி சங்கர், சண்முகராஜன் என பலர் நடித்துள்ளனர்.  ரமேஷ் துராணி,  ஜெய தௌராணி இணைந்து படத்தினை தயாரித்துள்ளனர்.  டேனியல் பி. ஜார்ஜ் மற்றும் ப்ரீதம் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Tags :
Advertisement