Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தலில் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என்று ABP-C Voter கருத்துக்கணிப்பு வெளியிடவில்லை என்பது அம்பலம்!

04:14 PM May 30, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newsmobile

Advertisement

மக்களவைத் தேர்தலில்  வடகிழக்கு டெல்லி தொகுதி பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என  ABP-CVoter கருத்துக்கணிப்பு கூறுவதாக வைரல் ஆகும் ஸ்க்ரீன் ஷாட் போலியானது என்பது அம்பலமாகியுள்ளது.

மக்களவை பொதுத் தேர்தல் 2024-ன்,  இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதற்கு மத்தியில்,  ஏபிபி நியூஸ் கருத்துக்கணிப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

C Voter இன் தரவுகளைப் பயன்படுத்தி,  ABP News, வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் நாடாளுமன்றத்தில் 258-286 இடங்களுடன் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது,  அதே நேரத்தில் BJP தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 232-253 இடங்கள் கிடைக்கும் என்று ஸ்கிரீன்ஷாட் கூறுகிறது.

இதே போன்ற பதிவுகளை இங்கும் இங்கும் காணலாம்.

உண்மைச் சரிபார்ப்பு

வைரல் படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டதால், நியூஸ்மொபைல் அந்தக் கூற்று தவறானது எனக் கண்டறிந்தது.

ஒரு தலைகீழ் படத் தேடல் மேற்கொண்டதில் ABP News YouTube சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவை காண முடிந்தது. டிசம்பர் 26, 2023 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவில், “மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு 2024:  வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஒவ்வொருவருக்கும் என்ன வாக்கு? | abp C ஓட்டர் வாக்காளர் கணக்கெடுப்பு.  “ வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் யார் எத்தனை சதவீத வாக்குகளைப் பெறுவார்கள்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏபிபி நியூஸில் மே 28 -ஆம் தேதியிட்ட தெளிவுபடுத்தல் அறிக்கையில் ,  'ஏபிபி நியூஸ் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 28 டிசம்பர் 2023 அன்று ஒரு கருத்துக் கணிப்பை ஒளிபரப்பியது.  இந்த கருத்துக் கணிப்பில்,  வடகிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி நல்ல வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.  மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது.  இந்த வீடியோ YouTube இல் கிடைக்கிறது. இதிலிருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து, அதை கிராபிக்ஸ் வாயிலாக மாற்றங்களை செய்து மனோஜ் திவாரி தோல்வியடைவதாக திரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பிடுவதற்கான ஒரு படம் கீழே உள்ளது.

எனவே, வைரலான ஏபிபி நியூஸ் ஸ்கிரீன்ஷாட் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டது என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘Newsmobile’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
amethidigitally alteredINDIA Bloclok sabhamanoj tiwarindanews7 tamilNews7 Tamil Updatesparliamentreverse image searchscreenshotSocial MediaSurveyThe Lok Sabha general elections 2024viral imageVOTING
Advertisement
Next Article