For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”வாக்காளர் பிரச்சினையை எழுப்ப நினைப்பது சரியானது அல்ல”- ஜிகே.வாசன்!

எதிர்க்கட்சிகள் தோற்க்க கூடிய நிலையால் வாக்காளர் பிரச்சினையை கிளப்ப நினைப்பது சரியானது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
09:08 PM Aug 03, 2025 IST | Web Editor
எதிர்க்கட்சிகள் தோற்க்க கூடிய நிலையால் வாக்காளர் பிரச்சினையை கிளப்ப நினைப்பது சரியானது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
”வாக்காளர் பிரச்சினையை எழுப்ப நினைப்பது சரியானது அல்ல”  ஜிகே வாசன்
Advertisement

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

"தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் திருப்புவனம் காவலாளி அஜித் கொலை அதிர்ச்சியான சம்பவம் அதைத் தொடர்ந்து நெல்லையில் ஆணவ கொலை போன்ற செயல்பாடுகள் மிகுந்த அச்சத்தை தமிழக மக்களிடம் கொடுத்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இம்மதிரி கொலைகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டிய நிலை இருக்க வேண்டும். தவறுகள் குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருந்தாலும் கூட. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை நடைபெறுவது தொலைக்காட்சி, பத்திரிகை மூலமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத திமுக அரசு செயல்படுவது இந்த அரசின் செயலற்ற திறனை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக போதைப் பொருட்கள் விற்கப்படுவது தொடர்கிறது. அதை நிறுத்தக்கூடிய சக்தி இந்த அரசுக்கு ஏன் இல்லை ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கல்விக்கூடங்கள் அருகே போதைப் பொருள் விற்பது 100% நிறுத்தப்பட வேண்டும். மேலும் சட்ட ஒழுங்கு சீர்கேடானதுக்கு காரணம் போதை பொருள் மட்டுமல்ல டாஸ்மாக் ஆதிக்கமும்தான். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கான நிலையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்பது எங்கள் தொடர் வேண்டுகோள்.

தமிழகத்தில் இன்னும் ஆறு, ஏழு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் எதிர்மறை வாக்குகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வருவதில் மாற்று கருத்து இல்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் ஆளுகின்ற ஆட்சிக்கு மாற்றாச்சி வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துவதற்கு ஓர் அணியில் சேர்வது தான் மக்களுடைய எண்ணமாக இருக்கிறது. அதற்கேற்றவாறு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தக் கட்சிக் கூட்டணியில் எதிர்காலங்களில் இன்னும் கட்சிகள் சேர பிரகாசமாக வாய்ப்பு உள்ளது. பாராளுமன்றத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முடக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்காக தமிழகத்தில் இருந்து அத்தனை பாராளுமன்ற
உறுப்பினர்களையும் ஆளுங்கட்சிக்கு மக்கள் கொடுத்தார்கள். ஆனால் பாராளுமன்ற செயல்பாட்டில் மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. பாராளுமன்றத்தை பற்றி கவலை படாத பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது ஏற்புடையதல்ல.

மேலும் செய்தியாளர்கள் வட மாநிலத்தில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,
”பீகாரிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி எதிர்க்கட்சிகள் தோற்கக் கூடிய நிலையை உறுதிப்படுத்தி கொண்டார்கள். அதனால் இந்த வாக்காளர் பிரச்சினையை கிளப்ப நினைப்பது சரியானது அல்ல மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை”

என கூறினார்.

Tags :
Advertisement