Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு - ராஜ்நாத் சிங் உறுதி!

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது என்னுடை பொறுப்பு என்று மத்திய ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார்.
06:59 AM May 05, 2025 IST | Web Editor
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது என்னுடை பொறுப்பு என்று மத்திய ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார்.
Advertisement

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர்,

Advertisement

"இந்த சம்பவத்தை நடத்தியவர்களை மட்டுமல்ல, இதற்கு பின்னால் அமர்ந்து இந்திய மண்ணில் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களையும் நாங்கள் விடமாட்டோம். பாதுகாப்பு அமைச்சராக, வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதும் எனது பொறுப்பு ஆகும்.

நமது நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் பணி தர்மம் மற்றும் விடாமுயற்சியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்”. இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags :
assuresattacksDelhipahalkamRajnath singh
Advertisement
Next Article