For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் என சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

07:49 PM May 30, 2024 IST | Web Editor
“பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் என சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது”   ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு
Advertisement

பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் தான் என சனாதன தர்மத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்களிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணைந்திருந்தாலும், சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள் இந்தியாவுடன் என்றுமே கைகோர்த்து இருந்துள்ளன. பல்வேறு நூற்றாண்டுகளாக பிரான்சு மற்றும் போர்ச்சுகீசிய ஆட்சியின் மூலமாக நம்மை விட்டு பெயரளவில் மட்டுமே இந்த இரு மாநிலங்களும் பிரிந்து இருந்தன. பாரத நாட்டின் அனைத்து மக்களிடமும் இவ்விரு மாநிலங்களும் விருந்தோம்பல் குணத்தினை வெளிப்படுத்தி இருந்தனர்.

பாரத நாட்டின் அனைவரும் ஒரே குடும்பம் தான். அது சனாதன தர்மத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மக்கள் மற்றொரு பகுதிக்கு எந்த விதமான தடையும் இன்றி பயணிக்க முடியும். தமிழ்நாட்டில் இருந்து சென்ற போதிதர்மர் சீனாவிற்கு சென்று பல சாதனைகளை படைத்தார். நாம் நம் வளமான பாரம்பரியத்தை பெருமையுடன் எடுத்து கொள்ள வேண்டும்.

சிக்கிம் மாநிலம் பூமியில் இருக்கும் சொர்க்கம் ஆகும். 35 ஆண்டுகளுக்கு மேலாக சிக்கிம் மாநிலத்தில் நான் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. சிக்கிம் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் வளமான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இந்த உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகள் பாரதத்தின் வளமான கலாச்சாரத்தில் பாதி அளவினை கூட கொண்டிருக்கவில்லை” இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement