For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது" - உத்தவ் தாக்கரே

10:09 AM Jun 06, 2024 IST | Web Editor
 தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது    உத்தவ் தாக்கரே
Advertisement

பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும்,  மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.  வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் நேற்று வெளிவந்தன.  இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில்,  பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனால்,  ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.  இந்த நிலையில்,  பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும்,  மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேவின் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி-க்கள்,  மும்பையில் அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.  அப்போது செய்தியாளா்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே,  "பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி என்ற பொய்யான பிம்பத்தை அக்கட்சியினா் உருவாக்கி வைத்திருந்தனா்.   ஆனால்,  அக்கட்சியை தோற்கடிக்க முடியும் என்பது இந்த மக்களவைத் தோ்தலில் உறுதியாகிவிட்டது" என்றாா்.

மகாராஷ்டிராவில்  இந்தியா கூட்டணியில் அதிகபட்சமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றதும்,  சிவசேனாவை உடைத்து புதிய அணியை உருவாக்கிய மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement