”வங்க மொழியை, வங்கதேச மொழி என்று குறிப்பிடுவது அவமானம்”- மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் டெல்லி காவல்துறையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை பகிர்ந்திருந்தார். அது டெல்லி காவல்துறை மேற்கு வங்க விருந்தினர் இல்லமான வங்கா பவனுக்கு எழுதிய கடிதம் ஆகும். அந்த கடிதத்தில் காவல்துறை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடம் விசாரணை நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்று தெரிவித்திருந்தது. அந்த கடிதத்தில் காவல்துறை வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்டுருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி டெல்லி காவல்துறை, வங்க மொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் பாஜக, இது அரசியல் ஆதாயத்துக்காக மம்தா பானர்ஜி செய்யும் வேலை என்று குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்வத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜியின் பதிவை மேற்கோள் காட்டி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்ப பதிவில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்காள மொழி" என்று குறிப்பிட்டுள்ளது . இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட வங்க மொழிக்கே ஏற்ப்பட்ட நேரடி அவமானம்.
இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அடையாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன.
இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மம்தா பானர்ஜி வங்காள மொழிக்கும் மேற்கு வங்க மக்களுக்கும் ஒரு கேடயமாக நிற்கிறார். பொருத்தமான பதிலடி இல்லாமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்”
என்று தெரிவித்துள்ளார்.