For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 50 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!

08:38 AM Mar 24, 2025 IST | Web Editor
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்   காசாவில் 50 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை
Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. இப்போரில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் இதுவரை 48,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும், 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் இந்த போரில் இடம்பெயர்ந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.

Advertisement

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.

இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல்களை தொடங்கியது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று காசா மீது இஸ்ரேல் நட்த்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனா்.
அவா்களில் ஹமாஸ் அரசியல் தலைவா், பெண்கள், சிறுவர்கள் அடங்குவா். இதன்மூலம், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது. போரில் இதுவரை 50,021 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement