For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காசாவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் - பொதுமக்கள் வெளியேற உத்தரவு!

ரபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
05:35 PM Mar 31, 2025 IST | Web Editor
காசாவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்   பொதுமக்கள் வெளியேற உத்தரவு
Advertisement

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாத தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை சமர்ப்பித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறாவிட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

Advertisement

அதே சமயம், போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படைகளின் வெளியேற்றத்திற்கு ஈடாக, மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் சிக்கிய மீதமுள்ள 59 பணயக் கைதிகளில் தற்போது 24 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காசாவில் உள்ள ரபா நகரில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ரபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், ரபா நகரில் இஸ்ரேல் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், இன்று ரமலான் பண்டிகை தினத்தில் ரபா நகர மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement