For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்: பிணைக் கைதிகள் விடுவிப்பு!

07:02 PM Nov 24, 2023 IST | Web Editor
இஸ்ரேல்   ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்  பிணைக் கைதிகள் விடுவிப்பு
Advertisement

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளிலிருந்து 24 பெண்கள், 15 இளைஞர்களும், அதே நேரத்தில் காஸாவிலிருந்து 13 பிணைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது  ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.  பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.  இஸ்ரேல், காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட  13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பல திரைப்பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். 

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில், சில பிணைக் கைதிகளை மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வகையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்தார். அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்று காலை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், 39 சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. இதற்கிடையே, இவர்களுக்கு மாற்றாக, ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட 13 பிணைக் கைதிகள் காஸா பகுதியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு நாள்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களில் உதவிப் பொருள்கள் ஏற்றப்பட்ட டிரக்குகள் ரஃபா வழியாக காஸா பகுதிக்குள் நுழையத் தொடங்கின. அதே நேரத்தில், காஸாவின் இரண்டு கிராமங்களில் இஸ்ரேல் ராணுவத்தின் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாகவும், ராக்கெட் குண்டுகள் வீசப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே நான்கு டேங்கர் லாரிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு நிரம்பிய நான்கு டேங்கர் லாரிகள் எகிப்திலிருந்து காஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags :
Advertisement