பாலஸ்தீன மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் | கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்!
காஸாவில் வான்வழித் தாக்குதல் மூலம் பத்திரிகையாளர்கள் 5 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ள பாலஸ்தீன் ஊடக அமைப்பினர், “பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து நடத்தப்படும் இத்தகையக் கொடுமைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் மூலம், இஸ்ரேலின் பாசிசத்தை நாங்கள் அம்பலப்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என்று உறுதியாகத் தெரிவிக்கிறோம்.
காஸா பகுதியில் செய்தியாளர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச ஊடகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற பழிவாங்கும் நோக்கத்திலான கொலைகளுக்கு பாசிச இஸ்ரேல் அரசு பொறுபேற்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் அல்-கிஸா டிவி நிருபர் சயீது ரத்வான், சனத் செய்தி நிறுவன நிருபர் ஹம்ஸா அபு சல்மியா, அல்-குத்ஸ் அமைப்பின் நிருபர் ஹனீன் பரூத், சாத் அல்-சகீப் செய்தி நிறுவனத்தின் அப்துல் ரகுமான் அல்-தனானி மற்றும் சுயாதீன நிருபராகப் பணியாற்றும் நாதியா அல்-சயீத் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.