#Gaza மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி! 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா தகவல்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு, காஸாவிலிருந்து 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்து தவித்துவருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்தது. குறிப்பாக காஸா பகுதியில் உள்ள மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 40,265-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
இதையும் படியுங்கள் : #Sholinganallur ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்! – தகவல் கூறியும் அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
இந்நிலையில், காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 90 சதவீதம் பேர் தாங்கள் வசித்துவந்த பகுதிகளில் இருந்து புலம் பெயா்ந்து தவித்துவருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது தவிர, நோய்த் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்த முடியாததால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அங்கு ஒரு குழந்தைக்கு போலியோ முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.