For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மகாராஜா” படத்தின் கலெக்‌ஷன் இவ்வளவா? -லேட்டஸ்ட் அப்டேட்!

06:51 AM Jun 16, 2024 IST | Web Editor
“மகாராஜா” படத்தின்  கலெக்‌ஷன் இவ்வளவா   லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படமான 'மகாராஜா', பாக்ஸ் ஆபிஸில் வலுவான வசூலை செய்துள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. நாயகி இல்லாத இந்த படத்தில் விஜய் சேதபதியுடன், நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி இந்த படம் பிரம்மாண்டாக வெளியானர்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா படம் இந்த ஆண்டில் பெரிய ஓப்பனிங் பெற்ற 3-வது படமாக மாறியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததே படத்தின் முதல் நாள் வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியில் வெளியாகாத மகாராஜா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே வெளியானது.

வெளியான முதல் நாளான ஜூன் 14 அன்று இரவுக்காட்சியில், 43 சதவிகிதம் ஆக்கிரமிப்பைப் பதிவுசெய்த மகாராஜா மவுத்டாக் மூலம் அடுத்தடுத்த நாட்களில் ஆக்கிரமிப்பை அதிகரித்தது. தெலுங்கில் மகாராஜா இரவுக் காட்சிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் ஆக்கிரமிப்பைப் பதிவு செய்ததால் வலுவாக இருந்தது. முதல் நாளில் 4.50 கோடி ரூபாய் வசூல் செய்த மகாராஜா திரைப்படம் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திங்கள் கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால்மகாராஜா வெளியான முதல் மூன்று நாட்களில் இப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படிபடத்தின் இரண்டாம் நாள் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோய் மோயின் கூற்றுப்படிதமன்னா பாட்டியா மற்றும் ராஷி கன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 (ரூ. 4.65 கோடி) மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர்முதல் நாளில் ரூ. 8.80 கோடி வசூலித்த பிறகுஇந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தமிழ் ஓப்பனர் மகாராஜா படம் தான்.

Tags :
Advertisement