For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TheGoat அரசியல் படமா? - ட்விஸ்டாக பதிலளித்த #VenkatPrabhu!

08:25 PM Aug 17, 2024 IST | Web Editor
 thegoat அரசியல் படமா    ட்விஸ்டாக பதிலளித்த  venkatprabhu
Advertisement

The Goat அரசியல் படமா? என்ற கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெங்கட் பிரபு,

“என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த படத்திற்காக நிறைய நாடுகள் சென்றுள்ளோம். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் படம் எடுத்துள்ளோம். படம் பார்த்து முடித்த பிறகு அனைத்து பாட்டுமே காட்சி ரீதியாக உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு கமர்ஷியல் படம். நடிகர் மோகன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் இந்த படத்தில் நடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி. அவரை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாள் நினைத்திருந்தேன்.

படத்தில் நடித்த அனைவருக்கும் சமமான காட்சி இருக்கும். ஆடியோ வெளியீட்டு விழா உள்ளதா? இல்லையா? என ஓரிரு நாட்களில் தெரியவரும். சூப்பர் ஸ்டார் அளவில் இருக்கும் ஒரு நடிகர், எளிய முறையில் பழகுவார். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கில்லி திரைப்படத்திற்கு நான் மிக பெரிய ரசிகன். எல்லாருக்கும் பிடித்தமான ஒரு விஜய்யை படத்தில் பார்க்கலாம்.

இது அரசியல் படம் கிடையாது. இது ஒரு கமர்ஷியல் படம் தான். படத்தில் வரும் காந்தி என்ற பெயர், மகாத்மா காந்தியை குறிக்காது. படத்தில் ஒரு இடத்தில் கூட அரசியல் இருக்காது. அவரும் வைக்க சொல்லவில்லை. என் நெருங்கிய நண்பரின் பெயர் கூட காந்தி தான். அவரை மையமாக வைத்து தான் கதையில் விஜய்க்கு காந்தி என பெயர் வைத்துள்ளேன். ஏன் காந்தி கலவரம் செய்கிறாரா? குடிக்கிறாரா? என குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement