லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ என வைரலாகும் காணொலி உண்மைதானா? - Fact Check
This News Fact Checked by ‘Newsmeter’
கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பயங்கரமான காட்டுத்தீ பரவி 35,000 ஏக்கருக்கு மேல் எரிந்து நாசமாகின. இதனைத் தொடர்ந்து காட்டுத் தீயானது பரவி வரும் நிலையில் அதனை அணைக்க போராடி வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 24பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்கா காணாத மிகப்பெரிய தீவிபத்து என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், காட்டுத்தீ பற்றிய பல்வேறு காட்சிகளைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கலிபோரனியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத்தீயின் உண்மையான காட்சிகள் என பரவலாக பகிரப்பட்ட காணொளியில் தீயில் எரியும் மலைகள் மற்றும் தீயில் மூழ்கிய நகரங்களின் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. ஃபேஸ்புக் பயனர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து "இது ஹாலிவுட் கிராபிக்ஸ் அல்ல, லாஸ் ஏஞ்சல்ஸ் தீயில் பற்றி எரிகிறது" என்று எழுதியுள்ளனர்.
உண்மைச் சரிபார்ப்பு:
நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்தது. இந்த வீடியோ AI ஆல் உருவாக்கப்பட்டதாகவும் அதில் உள்ள காட்டுத்தீயின் உண்மையான காட்சிகள் அல்ல என்றும் கண்டறிந்துள்ளது. உண்மையை அறிய வீடியோ தொடர்பான நம்பகமான அறிக்கைகளை நாங்கள் தேடினோம். ஆனால் இந்த வீடியோவைப் போன்ற எந்த புகாரையும் நாங்கள் காணவில்லை. இருப்பினும், இந்த வீடியோ AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று பல பயனர்கள் வைரல் இடுகையில் கருத்துத் தெரிவித்திருந்ததை கண்டோம்.
வெவ்வேறு இடங்களில் தீப்பிடித்ததைக் காட்டும் ஆறு கிளிப்களை ஒன்றிணைத்து வீடியோ உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். கீஃப்ரேம்களைப் பிரித்தெடுப்பதன் மூலம் வீடியோவை பகுப்பாய்வு செய்தோம், மேலும் AI டிடெக்டர் மூலம் இதைச் சரிபார்த்தோம்.
முதல் கீஃப்ரேம் எரியும் மலையை நோக்கிச் செல்லும் சாலையைக் காட்டுகிறது, அதே சமயம் கார்கள் எரியும் நெருப்பின் மத்தியில் போக்குவரத்து விளக்கில் நிறுத்தப்பட்டதைக் காட்டுகிறது. மூன்றாவது படத்தில் தீ மற்றும் புகையால் சூழப்பட்ட நகரத்தின் ட்ரோன் காட்சியைக் காட்டுகிறது, நான்காவது கட்டிடங்கள் மற்றும் சாலைகளுக்கு விரிவான தீ சேதத்தைக் காட்டுகிறது. ஐந்தாவது படத்தில் தீப்பிழம்பு மலையின் உச்சியை சூழ்ந்தது. இறுதி கீஃப்ரேம் ஆரஞ்சு நிற வானத்தில் தீப்பிழம்புகளால் சூழப்பட்ட நகரத்தைக் காட்டுகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் AI-உருவாக்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டது.
மற்றொரு டிடெக்டர் மூல ஆய்வு செய்ததில் "வாசிட் AI", கடைசி தீ ஃப்ரேம் தவிர மற்ற ஐந்து ஃபிரேம்களும் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்பதைக் கண்டறிந்தோம். ஹைவ் மாடரேஷன் மூலம் வீடியோவை மதிப்பாய்வு செய்யும் போது 99.8% இந்த ஒட்டுமொத்த வீடியோ உருவாக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
முடிவு :
லால் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ விபத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதனை நியூஸ் மீட்டர் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியபோது வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
இந்த செய்தியை வீடியோவாக காண