இந்து பெண்கள் - முஸ்லிம் ஆண்கள் குறித்து ‘ABP Live’ லோகோவுடன் வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Factly’
இந்து பெண்கள் மற்றும் முஸ்லிம் ஆண்கள் குறித்து ABP லைவ் லோகோவுடன் இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
சமூக ஊடகங்களில் இரண்டு பதிவுகள் (இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே) ஏபிபி லைவ் லோகோவுடன் வைரலாகி வருகின்றன. அதன் தலைப்பு, “இந்து பெண்கள் முஸ்லிம் ஆண்களிடமிருந்து மட்டுமே திருப்தி அடைகிறார்கள் என்று குளோபல் நியூஸ் கூறுகிறது” எனவும், மற்றொன்று, “இந்து பெண்கள் ஏன் முஸ்லிம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்?” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படங்களை ஏபிபி பகிர்ந்துள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
உரிமைகோரல் 1:
உரிமைகோரலைச் சரிபார்க்க, Google தேடல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ABP செய்திகளின் சமூக ஊடக பக்கங்களில் இந்த தலைப்புச் செய்திகளுடன் செய்தி அறிக்கைகள் அல்லது சமூக ஊடக பதிவுகள் எதுவும் இல்லை. குளோபல் நியூஸின் அதிகாரப்பூர்வ இணையதளமும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதுபோன்ற செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை.
வைரலாகும் படம் AI-ஆல் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. எனவே, புகைப்படம் True Media AI டிடெக்டர் கருவி மூலம் இயக்கப்பட்டது. அப்போது, இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் சரிபார்க்க, AI OR Not என்ற மற்றொரு கருவி பயன்படுத்தப்பட்டது. அப்போது படம் AI-ஆல் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று அந்த கருவி பரிந்துரை செய்தது.
கூடுதலாக, ABP செய்தியிலிருந்து ஒரு ட்விட்டர் (எக்ஸ்) (காப்பகம்) கண்டறியப்பட்டது. அதில் வைரலான ஸ்கிரீன் ஷாட் போலியானது என்றும் வைரலாகும் பதிவு அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் இருந்து பகிரப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அந்த பதிவில், "நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோதிகள் இதுபோன்ற பதிவுகளை பரப்புகிறார்கள்" என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், போலியான செய்திகளைத் தவிர்க்கவும், துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தை மட்டுமே நம்பவும் எனவும், நிறுவனம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
உரிமைகோரல் 2:
AI-ஆல் உருவாக்கப்பட்டதாகத் தோன்றாத மற்றொரு ஸ்கிரீன்ஷாட்டைச் சரிபார்க்க, தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்டது. இது தனு ராவத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ரீலை கண்டறிய உதவியது. எனவே, வைரலான ஸ்கிரீன்ஷாட் இந்த ரீலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது பேஸ்புக் சுயவிவரத்தின் 'About' பிரிவில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை குறிப்பிட்டிருந்தார். அங்கு அவர் தன்னை ஒரு கலைஞர் என்று குறிப்பிட்டிருந்தார்.
வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள சிறுவன் அகமது நவாஸ், கலைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் இடம்பெறும் மற்றொரு ரீலும் கிடைத்தது.
மேலும் விசாரணையில், தனு ராவத்தின் சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோ கிடைத்தது. அதில் அவர் அகமது நவாஸுடனான உறவை மறுத்தார். மேலும், அவர்கள் நல்ல நண்பர்கள் என்று தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்து Google தேடலும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ABP செய்திகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து இந்த தலைப்புச் செய்திகளுடன் செய்தி அறிக்கைகள் அல்லது சமூக ஊடக பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஏபிபி லைவ் லோகோவைச் சேர்க்க வைரல் ஸ்கிரீன்ஷாட் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டது என்பது இதன்மூலம் உறுதியானது.
"இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்" என்ற தலைப்பில் ஏபிபி லைவ் லோகோவைக் கொண்ட இதேபோன்ற போலி ஸ்கிரீன் ஷாட் சரிபார்க்கப்பட்டது.
முடிவு:
முஸ்லீம் ஆண்கள் மற்றும் இந்து பெண்களைப் பற்றி ABP லைவ் லோகோவுடன் AI-உருவாக்கிய மற்றும் திருத்தப்பட்ட படங்கள் உண்மையானவை எனப் பகிரப்படுகின்றன.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.